Wednesday, April 16, 2014

பயங்கரவாதப் பட்டியலில் ஐமசு முன்னணி, ஐதேகவுடன் ஜேவிபி

“டெரரிஸம் ரிஸர்ஷ் எண்ட் எனலைஸ் கொன்ஸோட்டியம்” எனும் “ட்ரெக்” நிறுவனத்தினால் பொதுபல சேனா அமைப்பு பயங்கரவாத அமைப்பாக காட்டப்பட்டிருந்தது. அதே பட்டியலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியும் இணைக்கப்பட்டுள்ளது.

இக்கட்சிகள் சில வருடங்களுக்கு முன்னர் பட்டியல் படுத்தப்பட்டிருந்தாலும் இதுவரை அவை பயங்கரவாதப் பட்டியலிலிருந்து நீக்கப்பெறவில்லை.

ட்ரெக் நிறுவனம் உலகிலுள்ள பயங்கரவாத அமைப்புக்களை ஆராய்ந்து அவை பற்றிக் கணிப்பீடு செய்வதில் முன்னணி வகிக்கும் நிறுவனமாகும். பொதுபல சேனா அமைப்பு பயங்கரவாத அமைப்பாக சில நாட்களுக்கு முன்னரே பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

(கேஎப்)

No comments:

Post a Comment