ஐக்கிய நாடுகள் சபையினால் சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள பிரேரணைக்கு இலங்கை ஒத்துழைப்பு நல்க வேண்டும் என ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேக்கா குறிப்பிடுகிறார்.
இலங்கைக்கெதிரான போர்க்குற்ற நடவடிக்கைகள் பொய்யானது என்பது நிரூபனமாவதற்கு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரினால் மேற்கொள்ளப்படவுள்ள ஆய்வினை மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹஸன் அலியினால் குறிப்பிடப்பட்டுள்ள கூற்றை ஆதரித்தே பொன்சேக்கா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“பொய்யாக அவர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து பிரேரணையை வெற்றிக் கொண்டார்கள். அதனால் எங்களுக்கு என்ன? என்று சொல்லித் திரியாமல் - முட்டாள் கதை கதைக்காமல் நாங்கள் முகங்கொடுத்து அதனைத் தீர்த்துக் கொள்ள ஆவன செய்ய வேண்டும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
No comments:
Post a Comment