Sunday, April 27, 2014

மாலைதீவு இலங்கைக்கு முக்கிய உறுதிமொழி! எச்சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு ஆதரவை வழங்குவோம்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் நேற்றுக் காலை சந்தித்த மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் நுன்யா மாமூன் சர்வதேச அரங்கில் இலங்கைக்கு மாலைதீவு முழுமையான ஆதரவை வழங்கும் என உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதியின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பின் போது கல்வி, இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உட்பட இரு நாடுகளின் நலன் சார்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி மாதம் மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் இலங்கை வந்திருந்த போது அவருடன் துன்யா மாமூனும் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com