தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு
வடமாகாண சபை உறுப்பினர்களில் சிலர் முன்னைய காலத்தில் செயற்பட்டதை விட மோசடி, சட்டவிரோதச் செயற்பாடுகள் என்பவற்றில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது தமக்கு கிடைத்துள்ள பதவியைப் பயன்படுத்தி இவ்வாறான சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலை, சுகாதார திணைக்களம் என்பவற்றின் ஒப்பந்தங்களில் மோசடி, அரச வாகனங்களை தமது சொந்த தேவைக்கு விதிமுறையை மீறி பயன்படுத்துகின்றமை, தனியார் துறையின் உதவியுடன் சட்டவிரோத கருக்கலைப்பு, அளவுக்கதிகமாக மக்களிடம் பணம் வசூலித்தல், வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதாக கூறி நிதியை ஆட்டையைப் போடல், பெண்களுடன் சில்மிசம், மக்களை மதிக்காமை, மக்கள் பணத்தில் சொகுசு வாழ்கை, சொந்தக் காரர்களுடன் அடிக்கடி பாட்டி, குடும்பத்திற்கு வேலை வாய்ப்பு எனப் பல செயற்பாடுகள் தொடர்கின்றன.
எனவே, இது தொடர்பாக எமது இணையம் தகவல்களை திரட்டிவருவதால் ஆதாரங்களுடன் தகவல்கள் இருப்பின் எமது இணையத் தள மின்னஞ்சல் முகவரிக்கு ilankainet@gmail.com அதனை அனுப்பி வைக்குமாறு எமது வாசகர்களை கேட்டு நிற்கின்றோம்.
இதேவேளை யார் அந்த மாகாணசபை உறுப்பினர்கள் என்ற விபரத்திற்கு பொறுத்திருங்கள். விரைவில்.. வருகின்றான்..விறுமாண்டி ஐபிஎஸ்
0 comments :
Post a Comment