Wednesday, April 30, 2014

சீறிபாயும் குருகுலராஜா கட்சியையும் மறந்திட்டாராம்! விறுமாண்டி ஐபிஎஸ்

வடமாகாண சபை உறுப்பினர்கள் மக்களுக்கு துரோகம் இழைப்பதாக கூறும் கருத்துக்களை அலச விறுமாண்டி வருகிறான். இந்த வாரம் வடமாகாண கல்வி அமைச்சருடன் ஒரு கருத்தாடல்...

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த குருகுலராஜா நிர்வாக ரீதியில் இறுக்கமானவர் என பலரும் பேசிய விடயம் தான். கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளராக விளங்கிய இவர், ரொம்ப நல்லவராம். நிர்வாகத்தில கொஞ்சம் ஸ்ரிக் என்றார் முன்னாள் அதிபர் ஒருவர்.

ஆளுனருடன் முரண்படுவது இவருக்கு அல்வா சாபிடுவது பேல இருந்ததாம். பிறகென்ன... வடமாகாணசபையில ஈசியா குதிச்சிட்டாரு... சங்கரியாருக்கு சங்கறுத்த சிறிதரன் குருகுலராஜாவுக்கு பலம் சேர்த்தார். அதனால் அவர் வென்றார்.

அமைச்சு தொடங்கியது. கிளிநொச்சி அமைச்சு கேட்டு சண்டை போட்டார் சிறிதரன். மூன்று உறுப்பினர் வென்று சங்கரி தோற்றதால் தமிழரசுக் கட்சியால் பாராட்டைப் பெற்று அமைச்சைப் பெற்று குருவுக்கு கொடுத்தார். அது மட்டும் அஅமைத்திப் புயல்... பிறகு சூறாவளி ஆகிச்சாம்..

சிறிதரன் பேச்சையும் கேட்காமல் தானா முடிவெடுக்கத் தொடங்கீற்றாராம் குரு. அப்ப புத்தி புடிபட்டு போட்டுது போல மச்சானுக்கு..

ஒரு அதிபர், ஒரு உத்தியோகத்தர் அவரை சந்திக்கச் செல்வது என்றால் ஜனாதிபதியை சந்திப்பது மாதிரிதானாம்.. அவற்ற பியோன் கூட நின்று கதைக்க மாட்டார் என்றார் பாருங்களன். எல்லாரும் ஒரே திட்டுத் தான்.. என்ன பண்ண கோதாரி விழுதவங்களுக்கு வாக்கு போட்டுட்டம் என்று புலம்பினார் கிளிநொச்சி ஆசிரியர் ஒருவர்.

நிர்வாகத்தில இறுக்கமாக மக்களின்ர வரிப் பணத்தில சம்பளம் வாங்கும் போது இருந்தீங்க. இப்ப மக்கள் உரிமையையே வாக்கிப் போட்டு அதற்றல் நிர்வாகம் எதற்கு..

வீட்டில் வந்து எவரும் சந்திக்க முடியாதாம்.. அலுவலகத்திற்குப் போனாலும் பேச்சாம்.. அப்ப எங்கய்யா உங்கள சந்திப்பது.. அரசியலு மக்களுக்கு சேவை செய்ய என்பதை மறந்தீட்டிங்களா? அல்லது நீங்கள் படிச்ச சிலபஸ்சில அது இல்லையா? எமக்குள் ஒரே குழப்பம்..

வாக்குப் போட்ட எங்களை மறந்தீங்க.. ஓகே.. சீற்று தந்த கட்சியையும் மறந்திட்டீங்களாமே.. வடமாகாண கல்வி மாநாட்டுக்கு ஈபிடிபி பக்கம் உங்களுக்கு அமோக வரவேற்பாம்.. சந்திரகுமார் எம்பி உங்கட நண்பனாமே.. கூட்டமைப்பு அரசியல் காரார் வரக் கூடாது என்று கறார ஒரு ஓடர் போட்டீங்களே.. அது சுப்பர்.. இப்படியே போன அடுத்த தலைவர் நீங்கள் தான்..

குருகுலராஜா என்றதும் ஒரே பயமாம்.. ஏன் அய்யா நீங்கள் பெற்ற வாக்குக்காக கொஞ்சம் வேலையுங்களன். இடமாற்றம், வேலைப் பிரச்சனை, நிர்வாகப் பிரச்சனை என யார் வந்தாலும் சீறி பாயும் மனிதர் ஆகிவிட்டீராம்.. கவலை தான் கடவுள் ஒரு தடவை தருவான். தந்திருக்கிறான்.. தக்க வைப்பது உங்கள் கையில்.. மீண்டும் வருவான் விறுமாண்டி சாறி பொஸ்... விறுமாண்டி ஐபிஎஸ்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com