எதிர்க்கட்சிகளின் பணிகளை ஊடகங்கள் நிறைவேற்றி வருவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
இன்று அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சிகளின் போட்டியில்லை. இந்த குறையை தீர்ப்பதற்கு இரண்டு குழுக்கள் நாட்டில் செயற்படுகின்றன.
ஒன்று ஊடகங்கள் மற்றையது ஆளும் கட்சியின் ஒரு சில குழுக்கள். புத்திகூர்மையுடன் அரசாங்கதை வழிநடத்தும் எதிர்க்கட்சியாக ஊடகங்கள் திகழ்கின்றன.
எதிர்க்கட்சிகளின் சார்பில் குழப்பங்களை செய்யும் தரப்பாக ஆளும் கட்சியின் ஓர் தரப்பினர் செயற்படுகின்றனர். இதன் ஓர் கட்டமே அண்மையில் ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்றது.
தந்தையின் தலையில் உள்ள நுளம்பை பெரிய பந்து ஒன்றினால் தாக்கிய மகன் பற்றி கிராமத்து கதைகளில் படித்ததுண்டு. அவ்வாறானவர்கள் ஆளும் கட்சியிலும் இல்லாமில்லை.
ஆளும் கட்சியின் சில முட்டாள்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். அமைச்சர் ரிசாத் பதியூதீன் போன்றவர்கள் இவ்வாறான முட்டாள்களே என சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
Yea that is true and also rishath acting all way against tamils
ReplyDeleteVery good said, not only he, all of them over all world.
ReplyDelete