வவுனியா தமிழரசுக் கட்சி கிளைக்குள் முரண்பாடுகளும் குத்துவெட்டுக்களும் ஏற்பட்டுள்ளதாக கட்சி ஆதரவாளர்கள் தெரிவித்துள்னர். சனிக்கிழமை காலை தந்தை செல்வாவின் நினைவு நாள் நிகழ்வுகள் வவுனியா மணிக்கூட்டுக் கோபுர பகுதியில் உள்ள தந்தை செல்வா நினைவு தூபியடியில் காலை 9.30 க்கு இடம் பெறும் என தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட தலைவரும் அக்கட்சியின் நீண்டகால மத்திய குழு உறுப்பினருமான டேவிட் நாதன் ஊடகங்களுக்கு அறிவித்திருந்தார்.
இந் நிலையில் காலை 9 மணிக்கு திடீரென தமிழ் தேசியக் கூட்டமைப்பில் புதிதாக இணைந்து வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வவுனியாவில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று சுகாதார அமைச்சர் பதவியைப் பெற்றுள்ள ப.சத்தியலிங்கதம் தலைமையில் ஒன்று கூடிய தமிழரசுக் கட்சி வவுனியா மாவட்ட உறுப்பினர்களான சேனாதிராஜா, கருணாநிதி மற்றும் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணித் தலைரவர் சீலன் உள்ளிட்ட குழுவினர் தந்தை செல்வாவின் நினைவுத் தூபிக்கு அவசர அவசரமாக மாலையை அணிவித்துவிட்டுச் சென்றனர்.
இதன் பின் காலை 9.30 மணிக்கு வந்த தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட மூத்த உறுப்பினர் டேவிட் நாதன் மற்றும் தேவராசா தலைமையிலான குழுவினர் சுகாதார அமைச்சரின் செயலைக் கண்டு தமக்குள் நொந்து கொண்டதுடன் தாம் திட்டமிட்டபடி தமது நினைவு தின நிகழ்வை மேற்கொண்டனர்.
தந்தை செல்வாவை இழிவு படுத்தும் முகமாக பொறுப்பு வாய்ந்த அமைச்சர் மற்றும் கட்சியின் மாவட்ட தலைவர் ஆகியோர் நடந்து கொண்ட விதம் தமிழ் மக்களின் ஒற்றுமையீனத்தையும் சுயநல அரசியலையும் மீண்டும் ஒரு தடவை ஞாபகப்படுத்தியதாக தெரியவருகிறது.
அடுத்து வரும் தேர்தல்களில் யார் போட்டியிடுவது என்பது தொடர்பில் ஏற்பட்டுள்ள போட்டிகாரணமாக மக்களை மறந்து இவ்வாறு இரு அணிகளாக தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்டகிளை செயற்படுவது வேதனையளிப்பதாக தந்தை செல்வாவின் வழியில் வந்த கட்சி உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
கட்சிக்குள் முரண்பட்டுக் கொண்டு இருக்கும் இவர்களா தமிழர் பிரச்சனையை தீர்பது என்று அங்கு வருகை தந்த கட்சி ஆதரவாள்களும் வீதியால் சென்ற பார்வையாளர்களும் கூறிக் கொண்டனர்.
No comments:
Post a Comment