இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை நடைமுறைச்சாத்திய மற்றதென ஜப்பான் தெரிவித்துள்ளது. ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை எதிர்ப்பதாக தெரிவித்துள்ள ஜப்பான் அரசாங்கம் அரசாங் கத்தினால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை முன்னெடுத்துப்பதற்கு ஆலோசனை தெரிவித்துள்ளது.
சிரேஷ்ட வெளியுறவு அமைச்சர் நொறியோ மிச்ஷூயா, ஜப்பானிய தூதுவர் அட்மிரல் வசந்த கருணகொடவை அண்மையில் சந்தித்த போது. தெரிவித்துள்ளார். மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு வக்காளிக்காமல் விலகியிருந்தமைக்காக தமது அரசாங்கத்தின் நன்றியினை தெரிவிப்பதாகவும் கருணகொட இச்சந்திப்பின் போது தெரிவித்தார்.
2011 ஆம்ஆண்டு ஜப்பானின் கிழக்கு பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்தின் போது இலங்கை தூதரகம் வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். இதற்கு பதிலளித்த இலங்கை தூதுவர் ஜப்பான் அரசாங்கமும் மக்களும் இலங்கையின் சமூக பொருளாதார உட்கட்டமைப்பு வசதிகளை முன்னெடுப்பதற்கு வழங்கிய பங்களிப்புக்கு நன்றியை தெரிவித்தார்.
அத்துடன் கடந்த சில வருடங்களாக ஜப்பான் உல்லாச பயணிகளின் எண்ணிக்கையும் முதலீடுகளின் அளவு இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாகவும் இலங்கை தூதுவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment