Saturday, April 26, 2014

இலங்கை, போர்க்காலப் பகுதியில் பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய நாடுகளின் பட்டியலில்…

ஐக்கிய நாடுகள் அமைப்பினால், போர் நடைபெற்ற காலகட்டத்தில் கற்பழிப்பு மற்றும் பாலியல் குற்றங்கள் நிகழ்ந்த நாடுகள் 21 இன் வரிசையில் இலங்கையையும் உள்ளடக்குவதற்கு ஆவன செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பென்கீ மூன் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐரோப்பா, ஆசியா, ஆபிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்குக்கு உட்பட்ட யுத்தம் நடைபெற்ற நாடுகள் 21 இல் பெண்கள் கற்பழிப்புக்குள்ளாகியுள்ளதுடன், பாலியல் வன்புணர்வும் நடைபெற்றுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் போர் நடைபெற்ற காலப்பகுதியில் பெண்கள் கற்பழிக்கப்பட்டமை தொடர்பிலும், பாலியல் வன்புணர்வுகள் இடம்பெற்றுள்ளமை தொடர்பிலும் தான் மிகவும் கவலையுறுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதி சய்னப் ஹவாபங்குரா குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்பில் ஆய்வு நடாத்துவதற்காக அந்நாட்டிலிருந்து விசேட பிரதிநிதியொருவரை நியமிக்குமாறு, சைனப் ஹவாபங்குரா நிவ்யோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான பிரதிநிதி கலாநிதி பாலித்த கோஹொனவுக்கு அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

(கேஎப்)

No comments:

Post a Comment