பொதுபல சேனா அமைப்புக்கு தான் ஒருபோதும் பயப்படப் போவதில்லை எனச் சொல்கிறார் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ.
அரசாங்கத்தின் பொறுப்பான - காணி இல்லாமல் அகதிகளாக நிற்போருக்கு காணிகளைப் பெற்றுக் கொடுத்து அவர்களை மீளக் குடியமர்த்துவதில் தன் முழுமூச்சியாக ஈடுபடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு அகதிகளாக நிற்கின்ற தமிழ் மக்களுக்கும் காணிகள் பெற்றுக் கொடுத்து அவர்களை மீளக் குடியமர்த்தப்படுவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போரின் காரணமாக அகதிகளாக நிற்கின்ற சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்கள் எல்லோருக்கும் எங்கிருந்தேனும் காணிகளைப் பெற்று அவர்கள் மீளக் குடியமர்த்தப்படுவர். அவர்கள் எவ்வாறேனும் குடியமர்த்தப்பட வேண்டும். அவர்களும் இந்நாட்டு மக்களே. இதற்கு முன்னரும் காணிகள் பெறப்பட்டு அகதிகள் குடியமர்த்தப்பட்டனர். அந்த இடத்தில் பாதைக்கு அடுத்த பக்கமாக இராணுவப் பாசறை ஒன்று உள்ளது. அதனையும் அப்புறப்படுத்துமாறு கூறுமா பொதுபல சேனா? எனவும் பசில் ராஜபக்ஷ வினா தொடுத்துள்ளார்.
(கேஎப்)
No comments:
Post a Comment