Friday, April 18, 2014

எரிக் சொல்ஹைம் மீண்டும் இலங்கையில்...!

அமெரிக்காவினால், இலங்கையின் வடக்கில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பில் எதிர்வரும் காலத்தில் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதனால், முன்னாள் நோர்வே விசேட தூதுவர் எரிக் சொல்ஹைமிடம் உதவி கோரப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் அமெரிக்காவில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போது, தெற்காசிய விடயங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க அரசின் உதவிச் செயலாளர் நிஷா பிஷ்வால் முன்னாள் நோர்வே விசேட தூதுவர் எரிக் சொல்ஹைமிடம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

நிஷா பிஷ்வால் மற்றும் எரிக் சொல்ஹைம் இதற்கு முன்னர் டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் இலங்கையின் பிரச்சினை பற்றி கருத்துப் பரிமாற்றம் செய்திருந்தனர்.

குறித்த கலந்துரையாடலில் போது, எரிக்சொல்ஹைம் அமெரிக்கா முன்னெடுக்கும் செயற்பாட்டுக்கு தனது பூரண ஒத்துழைப்புக் கிடைக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

1 comment:

  1. இவர்கள் இலங்கைக்கு எதிராக மிகப் பெரிய சதித்திட்டம் போடுகிறார்கள் , இவனை நாட்டுக்குள் வர விடக் கூடாது.

    ReplyDelete