தனது இரு குழந்தைகளையும் ஆற்றில் வீசிய தந்தை சடலமாக…!
மாத்தறை நில்வளா கங்கையில் நேற்று (24) தனது இரு குழந்தைகளையும் வீசிய தந்தையின் சடலத்தை மில்லால கங்கையிலிருந்து மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
நேற்று தனது இரு பிள்ளைகளையும் ஆற்றில் வீசுவதற்கு முன்னர், உயிரிழந்த நபருக்கும் அவரது மனைவிக்குமிடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டதாக ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகள் பொலிஸாருக்குத் தெரிவித்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் குழந்தைகளின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment