யட்டியாந்தோட்டை கரவநெல்ல, கம்புளுமுல்ல பகுதியில், கனரக ஆயுதங்களை உற்பத்தி செய்யும் நிலையமொன்று, பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டது. யட்டியாந்தோட்டை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, நேற்று இரவு இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
ஆயுதங்களுடன் குறித்த நிறுவனத்தின் உரிமையாளரும், கைது செய்யப்பட்டார். கடந்த 15 வருடங்களாக இந்த நிலையம் இயங்கியுள்ளதுடன், இங்கு உற்பத்தி செய்யப்பட்ட ஆயுதங்கள் இப்பிரதேசங்களில் விநியோகிக்கப்பட்டு வந்துள்ளமை, கண்டறியப்பட்டது. இப்பிரதேசத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வந்த பல்வேறு குற்றச்செயல்களுக்கு இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக, சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
இரண்டு துப்பாக்கி குழல்கள், ரீ 56 உதிரிப்பாகம், கைத்துப்பாக்கி குழல், வெற்றுத்தோட்டாக்கள் உள்ளிட்ட பல ஆயுதங்க்ள இங்கு கண்டெடுக்கப்பட்டன. கைப்பற்றப்பட்ட ஆயுதுங்களோடு சந்தேக நபர் இன்று றுவன்வெல்ல நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். யட்டியாந்தோட்டை பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment