புலிப் பெண்டாட்டியை சந்திக்க மறுக்கும் குங்குமப் பொட்டு முதலமைச்சர்
வட மாகாண முதலமைச்சர் குங்குமப் பொட்டு சி.வி. விக்னேஸ்வரனுக்கும் அச்சபையின் உறுப்பினரான அனந்தி எழிலனுக்கும் இடையில் முறுகல் நிலை தொடர்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முதலமைச்சரைச் சந்திக்க அனந்தி பல தடவைகள் முயன்ற போதிலும், அவரைச் சந்திக்க முடியவில்லை என புலிப் பொண்டாட்டி அனந்தி தெரிவித்துள்ளார்.
முன் கூட்டியே நேரம் ஒதுக்கினால் மட்டுமே முதலமைச்சரைச் சந்திக்கலாம் என அவரது செயலாளர்கள் கூறி வருவதாகவும் அனந்தி கவலையுடன் தெரிவித்துள்ளார்.
யாழ். வர்த்தக சங்கத்தினால் நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் முதலமைச்சர் கலந்து கொள்ளாமையையிட்டு அனந்தி தனது அதிருப்தியை அவரிடம் நேரடியாகத் தெரிவிக்க முயன்றுள்ளார்.
அத்துடன், ஜெனீவாவில் இடம்பெற்ற சில உட்கட்சி முரண்பாடுகள் தொடர்பாகவும் முதலமைச்சரிடம் அனந்தி தெரிவிக்க முற்பட்டுள்ளார். இதனை முன்கூட்டியே அறிந்தமையால், முதலமைச்சர் விக்னேஸ்வரன் அனந்தியைச் சந்திப்பதைத் தவிர்த்து வருவதாகத் தெரியவருகிறது.
தேர்தலில் முதலமைச்சருக்கு அடுத்ததாக அதிகப்படியான வாக்குகளை எடுத்த தன்னாலேயே கடந்த ஒருமாத காலமாக முதல்வரைச் சந்தித்துரையாட முடியாவிடின், வாக்களித்த ஒரு சாதாரண பிரஜையின் நிலை எப்படியிருக்கும் என எண்ணி அனந்தி தன் ஆதரவாளர்களிடம் கவலைப்பட்டதாகவும் தெரியவருகிறது.
என்னம்மா, ஏதோ புலிகளை சந்திக்கிற மாதிரி நினைச்சிட்டியள் போல. அவர் சிங்கள சம்மந்தி ஆச்சே. உங்கள வெளியேற்ற திட்டம் போடுற அவர் உங்கள சந்திப்பாரா. சரி... சரி... 28 ஆம் திகதி மாகாணசபை கூட்டத்தில தாடி முகத்தையாவது பார்க்கலாம் தானே விடுங்கம்மா...
0 comments :
Post a Comment