அக்கரைப்பற்றில் உள்ள தரம் 2 பாடசாலை ஒன்றை பரிசோதனைக்காக திடீர் பரிசோதனைக்குழுவிற்கும் ஆசிரியர் ஒருவருக்கும் இடையே இடம்பெற்ற வாக்குவாதம் விளக்குமாறு , கதிரை கொண்டு தாக்குதலில் முடிந்ததாக அறியமுடிகின்றது. இது தொடர்பாக தெரியவருவதாவது , கல்வி நிருவாக சேவைத்தரத்தைப் பெற்றுக் கொண்ட ஒருவரின் தலைமையில் சென்றது. இதில் பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள் , கோட்டக்கல்விப்பணிப்பாளர் ஆசிரிய ஆலோசகர்கள் போன்ற பலர் அடங்கி இருந்தனர்.
பாடசாலையின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் சுமுகமான முறையில் இடம் பெற்றது. பரிசோதனை நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் இறுதியில் தாராதரம் பெற்ற கல்வி அதிகாரிக்கும் ,பதில் கல்வி அதிகாரிக்கும் (தாராதரம் பெறாதவர்) இடையே காரசாரமான வாக்கு வாதம் இடம் பெற்று பதில் கல்வி அதிகாரி 'புதுத்தும்புத்தடி கூட்டுகிறது.,தரம் 5 ந்துக்குப் படிப்பிக்கத் தெரியாத நீ ஒரு கல்வி அதிகாரியா' என தாராதரம் பெற்ற அதிகாரியை கதிரையால் அடிக்க முனைந்ததையும் மாணவர்கள் மூலம் அறிய முடிகிறது.
இந்நிகழ்வு மிகவும் கண்டிக்கப்பட வேண்டியுள்ளது. வழமையாக சுமுகமாக நடைபெறும் குழுப்பரிசோதனை இன்று மட்டும் குழம்பியது ஏன்? ஒழுக்கம் புகட்டும் இடத்திற்கு இது பொருந்துமா? பாடசாலை மாணவர்கள் ,அதிபர்கள் ,ஆசிரியர்கள் ,அயல் வீட்டார் அனைவரும் அறியக்கூடியதாக நடந்த நிகழ்வு ஆரோக்கியமானதல்ல . நிலைமைகளைச்சுமுக நிலைக்குக் கொண்டுவரக் கோட்டக்கல்விப்பணிப்பாளர் பெரும் பாடுபட்டதையும் அறிய முடிகிறது.
ஆகவே இவ்விடயம் தொடர்பாக மாகாணக்கல்விப்பணிப்பாளரும் ,வலயக்கல்விப்பணிப்பாளரும் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரதேசப் பெற்றோர் கோரிக்கை விடுக்கின்றனர்.
No comments:
Post a Comment