பொலிஸார் தன்னைப் பற்றி விசாரணை செய்ய முன்வந்திருப்பது குறித்து தான் மகிழ்ச்சியடைவதாக பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார குறிப்பிட்டுள்ளார்.
தனக்கெதிராக உள்ள முறைப்பாடுகளை விசாரணை செய்ய முன்வந்துள்ளதனால், இதுவரை தான் வெளிப்படுத்தாத பல விடயங்களை, அதாவது
அடிப்படைவாதிகள் முன்னெடுத்துச் செல்கின்ற பாரிய செயற்பாட்டை பொலிஸார் முன்வைக்க முடியும் எனத் தெளிவுறுத்தியுள்ளார்.
பௌத்த மதத்தை இழிந்துரைக்கும் பாரிய அளவு புத்தகங்கள் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்படுவதாகவும், அதுஉட்பட அடிப்படைவாதிகளின் பல்வேறு செயற்பாடுகளை இதுவரை தன்னால் முன்வைக்க முடியாமல் இருந்ததாகவும் தற்போது தனக்கு அதற்கான அவகாசம் கிடைத்துள்ளதாகவும், இது சிறந்த தருணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறியதொரு விடயத்திற்கும் பிறமதத்தவர்கள் பொலிஸிற்குச் சென்று முறைப்பாடு செய்வதாகவும், பௌத்தர்கள் அவ்வாறு செய்யாமலிருப்பது கவலைக்குரிய விடயம் எனவும் குறிப்பிடுகின்ற ஞானசார, தனது மதத்திற்கு இனத்திற்கு தீங்கு விளைவிக்கப்படும் எவ்வேளையிலும் பயமில்லாமல் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்யுமாறு பொதுமக்களை அவர் கேட்டுள்ளார்.
(கேஎப்)
No comments:
Post a Comment