Friday, April 18, 2014

எல்ரிரிஈ அமைப்பிற்கு புத்துயிரளிக்க முயற்சிப்போரை கைது செய்வதற்கு, சர்வதேச பொலிஸாரின் உதவி பெறப்படவுள்ளதாம்.

உள்நாட்டிலும் இதுபோன்ற நபர்கள் தொடர்பில் பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமாம்!

எல்ரிரிஈ அமைப்பிற்கு மீண்டும் புத்துயிரளிக்கும் வகையில் செயற்பட்டு வந்த கோபி, அப்பன் மற்றும் தேவியன் ஆகியோர் அண்மையில் படையினரின் தாக்குதலில் மரணமடைந்துள்ளதாகவும் குற்றப்புலனாய்வு பிரிவினர், தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

விசேடமாக மேற்படி நாசகாரிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தவர்கள் குறித்து, விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் நாட்டில் மீண்டுமொரு வன்முறைகள் இடம்பெறுவதை தடுப்பதை நோக்காக கொண்டே, இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கு உதவி வருவோர் தொடர்பாக கண்டறியப்பட்டால், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த ஒருபோதும் பின்நிற்கப்போவதில்லை என்றும் மீண்டும் தாய்நாட்டில் பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு துணைபோக வேண்டாமென, நாட்டில் உள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம் அனைத்து மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம் என்றும் மூவின மக்களும் நாட்டில் ஐக்கியமாக வாழ வேண்டும் என்றும் இதை சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்க மாட்டோம். பொலிஸாரும், இராணுவத்தினருக்கும் மாத்திரம் இச்செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது என்றும் பொது மக்களின் உதவி இன்றியமையாது தேவைப்படுகின்றது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment