காங்கிரஸ் அம்மா-மகன் கட்சி: சாடுகின்றார் ராம்தேவ்
இந்திய பிரதமர் தேர்வில் நரேந்திரமோடி பிரதமராக ஆதரவு தெரிவிக்கும் யோகா குரு பாபா ராம்தேவ் காங்கிரஸ் கட்சி மற்றும் சோனியா-ராகுலை கடுமையாக சாடியுள்ளார்.
மும்பையில் நடந்த பத்திரிகையானர் சந்திப்பில் அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் ஆகியோரே பிரதமராக இருந்திருக்கிறார்கள். அம்மா-மகன் கட்சியான காங்கிரஸ் கட்சிதான் நாட்டை ஆளுகின்றது. அவர்களுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை. அவர்கள் மக்களின் துயரத்தை பற்றி கவலைப்படவில்லை.
மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெறும் என்பதில் மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது. அதே சமயம் காங்கிரசை வெளியேற்றும் நேரம் வந்துவிட்டது. நாட்டின் பெரும்பகுதி மக்கள் படிப்பறிவு இல்லாததால் அவர்கள் செய்து வரும் தவறுகளை உணராமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு காங்கரஸ் கட்சி செய்த பாவங்கள் தெரியாது.
காங்கிரஸ் கட்சி 40 முதல் 50 தொகுதி வரை மட்டுமே கைப்பற்றும். இங்கு மோடி அலை மட்டும் வீசவில்லை. மோடி என்ற சூறாவளியில் பெரிய மரங்களே சாயப்போகின்றது. அப்போது காங்கிரஸ் கட்சியில் ஊழல் செய்தவர்கள் நாட்டை விட்டு ஓடிவிடுவார்கள் என்று நான் நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 comments :
Post a Comment