நகர சபைக்கு எதிராக வழக்குத் தொடர்கிறது பொலிஸ்!
தினந்தோறும் குப்பைகளை அகற்றாதிருப்பதாக்க் கூறி பொலிஸாரினால் பாணந்துறை நகரசபைக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
பிரதேசத்திலுள்ள பல இடங்களிலுள்ள குப்பைகள் அகற்றப்படாமை குறித்து, பிரதேசவாசி ஒருவர் சூழலியல் பொலிஸ் பிரிவுக்குச் செய்த முறைப்பாட்டையடுத்தே இவ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
நகர சபைக்குட்பட்ட பகுதியெங்கிலும் தினந்தோறும் குப்பைகள் அகற்றப்படாதிருப்பதாகவும், ஒருநாள் விட்டு ஒருநாள் குப்பைகளை அகற்றும் பிரதேசம் பாணந்துறை நகர சபைப் பிரிவுக்குட்பட்டிருப்பதாகவும், பாணந்துறை நகர சபை சார்பில் பேசுகின்ற சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அதிகாலை 9 மணிக்கு முன்னர் குறித்த பிரதேசத்திலுள்ள குப்பைகள் நகரசபை “ட்ரக்டர்” மூலம் எடுத்துச் செல்லப்படுவதாகவும், அதன்பின்னர் பிற பகுதிகளில் வாழ்கின்றவர்கள் வாகனங்களில் குப்பைகளைக் கொண்டுவந்து போடுவதாகவும், அவ்வாறு போட்டுச் செல்லும் ஒரு குப்பைப் பை அடுத்தநாள் நகர சபையினால் குப்பை அகற்றப்படும்வரை அப்பிரதேசத்தில் காணப்படும் எனவும் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment