சுகாதாரத் திணைக்களம், நோயாளர்களுக்குத் தேவயான மருந்துப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளக்கூடிய மருந்தகங்கள் பற்றிய விபரங்களை கையடக்கத் தொலைபேசியினூடாகப் பெற்றுக்கொள்ளும் சேவையை ஆரம்பித்துள்ளது.
அதன் முதல் கட்ட நடவடிக்கை கொழும்பு மாவட்டத்தை உள்ளடக்கியதாக அமைந்திருக்கும்.
இச்செயற்பாட்டின் மூலம் நுகர்வோர் மருந்தகம் மற்றும் மருந்துப் பொருட்களின் விலைகளையும் தெரிந்துகொள்ள முடியுமாகவிருக்கும். வியாபாரப் பெயருடன் மருந்தின் பெயரும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கும்.
(கேஎப்)
No comments:
Post a Comment