விசாரணைகள் நியாயமாக இருக்கும் என்று நம்ப முடியாது
இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்காது என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மேற்கொள்ளும் விசாரணையை இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.
ஏற்கனவே பிள்ளை இலங்கை தொடர்பில் முன்கூட்டிய தீர்ப்பு ஒன்றை கொண்டிருப்பதால் அவரின் விசாரணைகள் நியாயமாக இருக்கும் என்று நம்ப முடியாது என்று பீரிஸ் தெரிவித்தார். இலங்கை குறித்த விசாரணையில் பங்கேற்காது. இலங்கை அதனை ஏற்றுக்கொள்ளாது என்று பீரிஸ் வெளிநாட்டு செய்தியாளர்களுக்கான சந்திப்பின் போது கூறினார்.
போர்க்குற்றங்களை சுமத்தியுள்ள நாடுகளே விசாரணைகளுக்கும் நிதியளிப்பதால் அது நியாயமாக இருக்காது. இந்தநிலையில் நவநீதம்பிள்ளை போர் முடிவடைந்த காலத்தில் இருந்தே இலங்கைக்கு எதிரான கருத்தை வெளிப்படுத்தி வருவதாக பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
No comments:
Post a Comment