Saturday, April 26, 2014

புதிய ஹோட்டல்களில் நிச்சயமாக “கஸினோ” இருக்கும்! - சம்பிக்க

நேற்று பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்ட சட்ட மூலத்தின் கீழ் முன்வைக்கப்பட்ட இரண்டாவது மற்றும் மூன்றாவது வர்த்தமானி அறிவித்தலின் கீழ் ஆரம்பிக்கவுள்ள ஹோட்டல் திட்டங்கள் இரண்டினதும் திட்டங்களில் சூது, பந்தயம் வசதி என்ற சொற்கள் நீக்கப்படாதிருப்பதனால், இவ்விரு திட்டங்களுடன் நாட்டினுள் பாரிய அளவில் கஸினோ திட்டம் நிச்சயமாக வரக்கூடிய சாத்தியக்கூறு உள்ளன என ஜாதிக்க ஹெல உறுமயவின் பிரதம செயலாளர் அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஹோட்டல் திட்டத்திற்காக முதலீட்டுச் சபை, அம் முதலீட்டாளர்களுடன் கைச்சாத்திட்ட உடன்படிக்கைகளில் இன்னும் சூது, பந்தய வசதி என்ற சொற்கள் நீக்கப்படவில்லை எனவும் அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.

புதிய வர்த்தமானி அறிக்கைகளில் கூட கஸினோவை நடாத்திச் செல்வதற்கு எந்தவொரு சட்டரீதியான தடையும் இல்லை எனக் குறிப்பிடுகின்ற சம்பிக்க, தங்களது கட்சி நாட்டினுள் கஸினோவை முன்னெடுக்கும் பொருளாதாரத்தை ஆதரிப்பதற்காக வாக்களிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com