Tuesday, April 22, 2014

துறைமுகம் நீச்சல் தடாகமாக… மத்தல விமான நிலை யம் அரும்பொருட் காட்சியமாக… ?

சிலர் நாட்டின் அபிவிருத்தியை பரிகாசமாய்க் கொண்டுள்ளார்கள் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குறிப்பிடுகிறார்.

கிராதுகோட்டையில் 1000 பேருக்கு காணிகளுக்கு உறுதிப்பத்திரங்கள் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“இன்று இந்நாட்டில் நூற்றுக்கு தொன்னூறு வீதமானோருக்கு மின்சாரம் பெற்றுக் கொடுத்துள்ளோம். பாதைகளை நிர்மாணிக்கின்றோம். அன்று கொஞ்சம் சிறுகற்கள் போட்டுத்தாருங்கள் என்றுதான் சொன்னார்கள். இன்று “காபட்” போட்டுத்தாருங்கள் என்று சொல்கிறார்கள்.

இன்று அந்த வேண்டுகோளும் நிறைவேற்றப்பட்டு வருகின்றது. இன்று இப்பிரதேசத்திலுள்ள முக்கிய பிரச்சினையாக இருப்பது குடிநீர் வசதி. அதனையும் வெகுவிரைவில் நிவர்த்திப்போம்.

நாங்கள் இவ்வாறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளும்போது சிலருக்கு நகைச்சுவையாக இருக்கின்றது.

தெற்கில் துறைமுகம் நிர்மாணித்தோம். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் கற்கள் இருப்பதாகச் சொன்னார்கள். அதனால் நாங்கள் அதனை நீச்சல் தடாகமாக மாற்றுவோம் எனச் சொன்னோம்.

மத்தல விமான நிலையத்தை அரும்பொருட் காட்சியமாக மாற்றுவோம் எனச் சொன்னோம்.

நாங்கள் இந்நாட்டில் அபிவிரத்திகளை மேற்கொள்ளும்போது அவர்களுக்கு அது பரிகாசமாக இருக்கின்றது. எங்கள் கிராமத்து மக்கள் அதற்கு இடங்கொடுப்பார்களா? எனவும் ஜனாதிபதி அங்கு உரைநிகழ்த்தியுள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com