சீன நாட்டவர்கள் ஐவருக்கு இலங்கையிலிருந்து தங்கள் நாட்டுக்குச் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் ஐவரினதும் விமானச் சீட்டுக்களையும் நீதிமன்றத்தில் பெற்று வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
அதிகமான கடற்குதிரைகள், கடல் அட்டைகள், சிப்பி ஓடுகள் அனுமதியின்றி தங்களிடம் வைத்துக்கொண்டு, இச்சந்தேக நபர்கள் ஐவரும் ஒரு வேனில் பயணித்துக் கொண்டிருக்கும்போது, கொள்ளுப்பிட்டி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இக்குற்றங்களை தாங்கள் ஏற்றுக் கொள்வதாக இச்சீனர்கள் உறுதியளித்துள்ளதுடன், அதற்கேற்ப ஒருவர் ரூபா 50,000 வீதம் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
(கேஎப்)
No comments:
Post a Comment