பிரசன்ன மற்றும் சானுக்கு மீண்டும் முதலமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு…!
மேல்மாகாணம் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான முதலமைச்சர்களின் பெயர்கள் இன்று (01) பிற்பகலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின்போது குறிப்பிடப்படவுள்ளது.
இம்முறை நடைபெற்ற மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலில் பிரசன்ன ரணதுங்க, சான் விஜயலால் இருவரும் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளதனால், அவர்கள் இருவரும் இவ்விரு மாகாணங்களுக்கும் முதலமைச்சர்களாக இவர்களிரும் தெரிவாவர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது என தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இம்முறை மேல் மாகாணத்திற்காக கம்பஹா மாவட்டத்திலிருந்து போட்டியிட்ட பிரசன்ன 249678 விருப்பு வாக்குகளைப் பெற்று மேல் மாகாணத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
2009 மேல் மாகாண சபைத் தேர்தலின் போது, 188338 விருப்பு வாக்குகளை அவர் பெற்றிருந்தார்.
அதற்கேற்ப பார்க்கும்போது, சென்ற மாகாண சபைத் தேர்தலில் அவர் பெற்ற வாக்குகளை விடவும் இம்முறை 61340 மேலதிக வாக்குகளை அவர் பெற்றுள்ளார்.
தென் மாகாண சபைக்காக காலி மாவட்டத்திலிருந்து போட்டியிட்ட சான் விஜயலால் த சில்வா 95860 வாக்குகளைப் பெற்று தென் மாகாணத்தில் முதலிடத்தில் உள்ளார்.
2009 ஆம் ஆண்டு அவர், 90294 வாக்குகளையே பெற்றார். இருந்தபோதும் இம்முறை அவர் சென்ற மாகாண சபைத் தேர்தலில் பெற்ற வாக்குகளை விட 5566 மேலதிக வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மேல், தென் மாகாண சபைகளுக்காக முதலமைச்சர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்காக வழங்கப்படும் மேலதிக 4 ஆசனங்களுக்காக நியமிக்கப்படவுள்ள உறுப்பினர்கள் பற்றியும் இன்று (01) பிற்பகலில் தீர்மானிக்கப்படவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிரிசேன குறிப்பிட்டார்.
(கலைமகன் பைரூஸ்)
No comments:
Post a Comment