தற்போதை அரசாங்கத்தை கவிழ்க்கும் எண்ணம் தங்கள் அமைப்புக்கு இல்லாதபோதும், தேவைப்பட்டால் அரசாங்கத்தை கவிழ்க்கவும், புதிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தவும் தங்களது அமைப்பினால் முடியும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிடுகிறார்.
இன்று (22) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், பொதுபல சேனா சூழ்ச்சி செய்வதாக சில அமைச்சர்கள் குறிப்பிடுகிறார்கள். முடியுமாயின் அவர்கள் அதனை நிரூபிக்கட்டும் என சவாலும் விடுத்துள்ளார்.
(கேஎப்)
No comments:
Post a Comment