“எங்களது இந்தப் பயணத்தின் நோக்கம் இலங்கையில் மிகவும் பயங்கரமான முஸ்லிம் அடிப்படைவாதிகள் இருக்கிறார்கள். அவர்கள் தௌஹீத் ஜமாத் என்று அழைக்கப்படக்கூடியவர்கள்.”
இவ்வாறு பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேர்ர் இன்று (23) மாநாயக்க தேர்ரைச் சந்தித்துக் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து குறிப்பிடும்போது,
திரிபீடகத்தினர் மாணிக்கக் கற்கள் மூன்றினை வைத்து உபன்னியாசம் செய்கின்றார்கள்…பௌத்த மாதவன் மனித இறைச்சி சாப்பிட்டார்… பௌத்த மாதவன் உட்பட பௌத்தர்கள் கண்மூடித்தனமான விடயங்களில் ஈடுபடுகின்றார்கள் என பயமின்றிச் சொல்கிறார்கள்.
இப்படிச் சொல்லும் காணொளி எங்களுக்குக் கிடைத்துள்ளது. நாங்கள் தேவையான இடங்களுக்கு அவற்றை அனுப்பியுள்ளோம். இன்றுவரை எங்களது பாதுகாப்புப் பிரிவுக்கு ஒருவரையேனும் கைதுசெய்ய முடியவில்லை. இதனை நாங்கள் அகில இலங்கை பௌத்த மதகுருமார் சார்பில், தௌஹீத் ஜமாஅத்தினர் செய்துள்ள இந்த பாரதூரமான கூற்றை மாநாயக்க தேரராகிய உங்களுக்குக் கையளிக்கிறோம். இதனை வைத்து சட்டத்தை நிலைநிறுத்துமாறு கோருகிறோம். மிக அவசரமாக தேவையானவர்களுடன் தொடர்புகொண்டு தெளிவுறுத்துங்கள். அவ்வாறு நடந்தேறாவிட்டால் வெகுவிரைவில் இதற்கு எதிராகச் செயற்பட வேண்டி எங்களுக்கு ஏற்படும்.” எனக் குறிப்பிட்டார்.
ஞானசார்ரின் கூற்றை கேட்டுக் கொண்டிருந்த மாநாயக்க தேர்ர்,
“தாங்கள் பௌத்த மதகுருமாருக்குரிய கௌரவத்தை இழந்து செயற்படுகின்றீர்கள். நாட்டுக்காகவும், இனத்திற்காகவும், மதத்திற்காகவும். இவை அரசாங்கத்தால் சரிவர நிறைவேறாததால். அரசாங்கத்தில் நிறைய அமைச்சர்கள் இருக்கிறார்கள். என்றாலும் ஒன்றும் ஆவதில்லை. சிற்சில வேளைகளில் நாங்கள் சில விடயங்களைச் சொல்லியிருக்கிறோம். அவற்றைக் கணக்கிற் கொள்ள மாட்டார்கள். நீங்கள், “அரசாங்கத்தை சரிசெய்யவும் முடியும், அரசாங்கத்தைக் கவிழ்க்கவும் முடியும்” என்று சொல்லியிருந்த்தை பத்திரிகையில் படித்தேன். எதை வேண்டுமானாலும் செய்யுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு ஞானசார்ர்,
மாநாயக்க தேரராகிய உங்களது பிரார்த்தனைகளும், ஆலோசனைகளுமின்றி நாங்கள் எந்தவொரு வேலையையும் செய்ய மாட்டோம். நீங்கள் நாளைக்கு இந்த வேலைகளை நிறுத்துங்கள் எனச் சொன்னால் நாளைக்கே நிறுத்திவிடுவோம். என்றாலும், எங்களை வெட்டிப் போட்டாலும் அமைச்சர்கள், அரசியல்வாதிகள் சொல்பவற்றைக் கேட்க மாட்டோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
(கலைமகன்)
No comments:
Post a Comment