Sunday, April 20, 2014

போர்க் குற்றவாளிகள் எனச்சொல்லி நவபிள்ளையிடத்தில் 6000 பொய்ப் பெயர்கள்…

புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்த இராணுவத்தினர் உட்பட இந்நாட்டிலிருந்து வெளிநாட்டுக்குச் சென்று தலைமறைவாகியுள்ளோர், இராணுவத்தினர் அல்லாதவர்கள் ஆகியோர் இலங்கை இராணுவத்திலுள்ள போர்க் குற்றவாளிகள் எனக் குறிப்பிட்டு பிரித்தானிய தமிழ் மன்றம் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையிடம் 6000 பெயர்களைக் கொண்ட அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது.

இவர்கள் அனைவரும் வவுனியா நடைபெற்ற யுத்த்த்தில் கலந்துகொண்டவர்கள் எனக்கூறிப்பிடப்பட்டுள்ள அவ்வறிக்கை 130 பக்கங்களை உள்ளடக்கியுள்ளது.

அடுத்த மாதம் ஆரம்பப் பகுதியில் நவநீதம்பிள்ளையினால் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை தொடர்பிலான ஆய்வறிக்கைக்கு உசாத்துணையாகவே பிரித்தானிய தமிழ் மன்றம் இந்த அறிக்கையை கையளித்துள்ளது.

வன்னிப் போரில் கலந்துகொள்ளாத இராணுவத்தினரின் பெயர்களும் அதில் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த வன்னிப் போர் நடைபெறுவதற்கு முன்னர் பதவி விலகியிருந்த இராணுவத்தினரின் பெயர்களையும் இணைத்து அறிக்கை தயாரித்துள்ள புலம்பெயர் புலி ஆதரவாளர்களின் அறிக்கை நகைப்பை ஏற்படுத்துவதாக சொல்லப்படுகின்றது.

(கேஎப்)

1 comments :

Arya ,  April 20, 2014 at 1:59 PM  

போர்க் குற்றங்களுடன் தொடர்புடைய எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும், எப்படி எனில் , புலம்பெயர் நாடுகளில் அவர்கள் இப்போது வேறு உருவில் உள்ளார்கள், நாடு கடந்த அரசு , தமிழர் ஒருங்கிணைப்பு குழு (TCC) , GTF, TYO, BTF என இன்னும் பல முகமூடிகளை அணிந்து உள்ளனர், இவர்கள் கைது செய்து உரிய முறையில் விசாரித்து தண்டனை வழங்க வேண்டும்.
அத்துடன் பல பாரிய போர்க் குற்றங்களுடன் சித்திரவதைகளுடன் தொடர்புடைய பல முன்னால் புலி உறுப்பினர்கள் ஐரோப்பிய நாடுகளில் தலை மறைவாக உள்ளனர் அவர்களையும் கைது செய்து தண்டனை வழங்க வேண்டும்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com