600 தமிழ் பெண்களை யாழ் மாவட்டத்திற்கான பொலிஸ் சேவைக்கு இணைக்க நடவடிக்கை நடவடிக்கை எடுத்து ள்ளதாக யாழ். பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன தெரிவித்தார். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த பொலிஸ் சந்திப்பின் போது கருத்து வெளியிடுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் பெண் பொலிஸார் பற்றக்குறையாக உள்ளதாக எமக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. நாடளாவிய ரீதியில் பொலிஸ் சேவைக்கு பெண்களை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கையின் ஒரு கட்டமாகவே யாழ். மாவட்டத்திலும் பெண்கள் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
யாழ். மாவட்டத்திற்கு தேவையான 500 பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்களையும் 100 பெண் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர்களையும் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு உத்தேசித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment