இந்நாட்டுப் பல்கலைக்கழங்களில் கல்வி கற்பதற்காக, வெளிநாட்டு மாணவர்களைக் கொண்டுவருவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புலமைப் பரிசில் திட்டத்தின் கீழ், இவ்வாண்டு வெளிநாட்டு மாணவர்கள் 50 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக உயர் கல்வியமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன குறிப்பிடுகிறார்.
20 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் இதுவரை இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். ஏனையோரும் இலங்கைப் பல்கலைக் கழகங்களில் கற்பதற்கு விருப்புத் தெரிவித்திருக்கின்றனர் எனவும் திரு. நவரத்ன குறிப்பிட்டுள்ளார்.
தாய்லாந்து, பூட்டான், மியன்மார், பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேசம், மாலைதீவு, நேபாளம், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இப்புலமைப் பரிசிலுக்குரியவர்களாக இருக்கின்றனர். இவர்களில் அதிகமானோர் பூட்டானைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இம்மாணவர்களுக்கு இருவழி விமானப் பயணச்சீட்டு இலவசமாக வழங்கப்படுவதுடன், மாதாந்தம் 30000 கொடுப்பனவும், கற்பதற்கான அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(கேஎப்)
No comments:
Post a Comment