Friday, April 18, 2014

ஒரு மாணவனுக்காக 30 இலட்சம் செலவு செய்யும் ஒரே நாடு இலங்கை! - பேராசியர் சாந்த ஹென்நாயக்க

பாடசாலை மாணவரொருவருக்கு பல்கலைக்கழகக் கல்வி முடியும்வரை அரசாங்கம் 30 இலட்சம் ரூபாவைச் செலவு செய்யவேண்டியுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சாந்த ஹென்நாயக்க தெரிவித்துள்ளார்.

“மகபொல” புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலவசக் கல்விச் சலுகை வழங்கும் உலகின் ஒரே நாடு இலங்கையாகும் எனக் குறிப்பிட்டுள்ள அவர்,

“கல்விக்காக செலவு செய்யும் ஒரே நாடு இலங்கை. மனித வளத்தை மேம்படுத்துவது இலவசக் கல்வியின் மூல நோக்கமாகும். பல்கலைக் கழகத்தில் கற்று, பல்வேறு வழிகளில் தொழில்கள் செய்வதற்கான ஏற்பாட்டைச் செய்துகொடுப்பது இந்நாட்டில் வாழ்கின்ற மக்களின் வரிப்பமாகும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com