பாலியல் வன்முறைகளில் இலங்கை படையினர் தொடர்பு 3 வீதம் மாத்திரமே! குற்றச்சாட்டு தவறானது - சவேந்திர சில்வா!
இலங்கையின் போரின் போதும், பின்னரும் பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் பாலியல் வன்முறைகள் தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ள இலங்கை அரசு, பாலியல் வன்முறையில் 3.3 சதவீதம் மட்டுமே நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
பெண்கள் மற்றும் சமாதானம் மற்றும் பாதுகாப்பு என்ற விஷயம் தொடர்பாக நியூயார்க்கில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று பேசிய ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான பிரதிநிதி சவேந்திர சில்வா, இலங்கையில் போரின் போதும் பின்னரும் இடம்பெற்ற பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்பாக படையினர் மீது குறைந்த அளவிலான குற்றச்சாட்டுக்களே சுமத்தப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
சமாதானம், பாதுகாப்பின்மையும் போரின் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்தமையும் பாலியல் வன்முறைகளுக்கு காரணமாக அமைந்திருந்தன. எனினும் இலங்கை அரசை பொறுத்தவரையில் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக கடுமையான கொள்கைகளை அரசு நடைமுறைப்படுத்தி வருகின்றது என தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் 2007 -2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகளில் 7 படைவீரர்களே தொடர்பு கொண்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இதில் 5 சம்பவங்கள் வடக்கில் இடம்பெற்றவையாகும். எனினும் குறித்த காலப்பகுதியில் 119 பாலியன் வன்முறைகள் இடம்பெற்றிருந்தன.
2009- 2012 ஆம் ஆண்டு காலத்தில் இலங்கையில் 256 பாலியல் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றன. எனினும் வடக்கில் இடம்பெற்ற 6 சம்பவங்களில் மாத்திரமே இலங்கை படையினர் தொடர்புக்கொண்டிருந்தனர். அதாவது இது மொத்த பாலியல் வன்முறையில் 3.3 சதவீதமாகும்.
இலங்கைக்கு எதிராக இந்த விஷயத்தில் தேவையற்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகிறது. எனவே பாலியல் வன்முறைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகின்ற போதும் உறுப்பு நாடுகளின் இறையாண்மையை ஐக்கிய நாடுகள் சபை கவனத்தில் கொள்ளவேண்டும்' என்றார்.
0 comments :
Post a Comment