2013 இல் போதையில் வாகனம் செலுத்திய 51764 பேர் கைது!
பொலிஸாரினால் 2013 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின் மூலம், போதையுடன் வாகனம் ஓட்டிய சாரதிகள் 51,764 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாண்டில் கடந்து போன மாதங்களில் மாத்திரம் 14,153 சாரதிகள் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவர்களில் 1315 பேர் ஏப்ரல் மாதம் 10 - 16 ஆம் திகதிகளுக்கு இடையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதையில் வாகனம் ஓட்டிச் சென்ற சாரதிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சென்ற வருடம் தற்காலிகமாக 2237 சாரதி அனுமதிப் பத்திரங்கள் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளன. இவ்வருடம் 364 சாரதி அனுமதிப் பத்திரங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.
(கேஎப்)
0 comments :
Post a Comment