2013 இல் இலங்கை விமானச் சேவைக்கு 2860 கோடி ரூபா நட்டமாம்....!
இலங்கை விமானச் சேவைக்கு 2013 ஆம் ஆண்டில் 2860 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தனது 2013 ஆண்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு 2700 கோடி ரூபா நட்டத்தை அடைந்தது இலங்கை விமானச் சேவை. அத்துடன் அது சென்ற வருடம் 2860 கோடியாக உயர்ந்துள்ளது.
இலங்கை விமானச் சேவை 2013 ஆம் ஆண்டில் 10950 கோடி ரூபா வருமானம் பெற்றிருந்ததுடன், அதனை நடாத்துவதற்காக 13810 கோடி ரூபா செலவாகியுள்ளதாக அவ்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
மிகின் லங்கா விமானச் சேவை 2013 ஆம் ஆண்டில் 150 கோடி ரூபா நட்டமடைந்திருந்த்தாகவும் அவ்வறிக்கையில் காட்டப்பட்டுள்ளது.
(கேஎப்)
0 comments :
Post a Comment