Sunday, April 27, 2014

தே.சி.பா. அதிரடி! 15 வயதிற்கும் குறைவான சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற பல்கலைக்கழக விரிவுரையாளர் கைது!

15 வயதிற்கும் குறைவான சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்தார் என குற்றம் சாட்டப்பட்டு பல்கலைக்கழக விரிவுரையாளரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். றுகுணு பல்கலைக்கழக வளாகத்துடன் இயங்கும் கராப்பிட்டிய வைத்தியப்பிரிவைச் சேர்ந்த பல்கலைக்கழக விரிவுரையாளரொருவர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இணையத்தைப் பயன்படுத்தி மேற்படி விரிவுரையாளர் இணையத்தின் ஊடாக ஆபாசப்படங்களை காண்பித்து தகாதவாறு உரையாடியுள்ளார். குறித்த சிறுமியை நேரடியாக பார்க்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இவரை கண்டுபிடிக்கும் நோக்குடன் 15 வயது சிறுமியை போன்று உரையாடிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் 'சைபர் வோட்ச்' என்னும் இணைய துஷ்பிரயோக தவிர்ப்பு சட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட கண்காணிப்பின் அடிப்படையில் குறித்த பேராசிரியரை கைது செய்துள்ளனர்.

No comments:

Post a Comment