கொட்டகலையில் சம்பவம்!
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையை மீறி அதிக விலையில் அரசியை விற்பனை செய்த அட்டன் மற்றும் கொட்டகலை நகரில் உள்ள வர்த்தகர்கள் 10 பேர்க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்திருப்பதாக நுவரெலியா விலை கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுமக்கள் வழங்கிய புகாரின்படி 22.04.2014 அன்று நுவரெலியா விலை கட்டுப்பாட்டு அதிகாரிகள சுற்றிவளைப்பை மேற்கொண்டார்கள். அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் படி ஸ்டிம் அரிசி 1 கிலோ 68 ரூபாவாகும். ஆனால் குறித்த வர்த்தகர்கள் 80 ரூபாவிலிருந்து 90 ருபா வரை அரிசி விற்பனை செய்துள்ளனர்.
அதேபோல் அத்தியவசிய பொருட்களையின்; விலை பலகை இல்லை எனவும் நுவரெலியா மாவட்டத்தில் பிரதான நகரத்தில் உள்ள கடைகளையும் தோட்டப்பகுதியில் உள்ள சிறு கடைகளையும் சோதனைக்குட்படுத்தயிருப்பதாக விலை கட்டுப்பாட்டு அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
(க.கிஷாந்தன்)
No comments:
Post a Comment