பயங்கர வைரஸ்கள் இரண்டு இலங்கைக் கணனிகளை தாக்கியுள்ளன ! - Z நிறுவனம்
தற்போது இலங்கையில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற கணனிகள் மிகப் பயங்கரமான நிலையில் உள்ள ட்ரோஜான் மற்றும் செலிட் எனும் வைரஸ்களின் தாக்குதலுக்குள்ளாகியிருக்கின்றன என உலகப் புகழ் முன்னணி மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான இஸட் நிறுவனம் தெரிவிக்கின்றது.
இலங்கைக்காக வழங்கப்பட்டுள்ள சர்வதேச வைரஸ் தொடர்பான அறிக்கையிலேயே இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், இந்நாட்டில் பயன்படுத்துகின்ற கணனிகளில் நூற்றுக்கு ஏழு கணனிகள் ட்ரோஜான் வைரஸினால் பாதிப்புக்குள்ளாகியிருப்பதும் தெளிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வைரஸானது கணனியின் சகல பகுதிகளையும் தாக்கும் வல்லமை கொண்டது. இதன்மூலம் இணையப்பக்கங்களை சரிவர உபயோகிக்கவும் முடியாது. குறித்த்தொரு பக்கத்தை திறக்க முயலும்போது, வேறொரு பக்கத்தையே திறக்கச் செய்கிறது இவ்வைரஸ். அத்துடன், அவ்வாறு செயற்படும் அந்த வைரஸானது எவ்வித அனுமதியுமில்லாமல் கணனியிலிருந்து தகவல்கைளைப் பெற்றுக் கொள்கின்றது.
மிகப் பாரிய அளவில் இந்நாட்டு கணனிகளைத் தாக்கும் அடுத்த வைரஸ் செலிட். இதன்மூலம் விண்டோஸ் இயங்கு தளம் பாரிய அளவில் தாக்கப்படுகின்றன. மேலும், மின்னஞ்சல் கடவுச் சொல்லின்றித் திறந்து கொள்கிறது என்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
(கேஎப்)
0 comments :
Post a Comment