LTTE யால் கொல்லப்பட்ட 160 முஸ்லிம்களின் சடலங்களை தோண்டி எச்சங்களை உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கை!
மட்டக்களப்பில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு அவர்களின் சடலங்கள் புதைக்கப்பட்ட இடங்களை காணமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் சென்று பார்வையிட்டனர்.
1990 ஆம் ஆண்டு 160 முஸ்லிம்கள் எல்ரிரிஈயினரால் ஒரே தினத்தில் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாக ஆணைக்குழு முன் சட்சியமளிக்கப்பட்டுள்ளது.
குருக்கள் மடம் கடற்கரை பகுதியில் சடலங்கள் புதைக்கப்பட்ட இடங்களை இவர்கள் பார்வையிட்டனர். மாகாண சபை உறுப்பினர் ஸிப்லி பாருக் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இவ்விடத்தை பார்வையிட வருமாறும் கடந்த நவம்பர் மாதம் விடுத்த வேண்டுகோளின் பேரில் இக்குழு விஜயம் செய்தது.
அவ்விடங்களை பார்வையிட்ட ஆணைக்குழு தலைவர் மெக்வல் பராக்கிரம பரணகம இதனை துரிதமாக சட்டமா அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்று சடலங்களை தோண்டி எச்சங்களை உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இது தொட்ர்பான மாகாண சபை உறுப்பினர் ஸிப்லி பாருக் கருத்து தெரிவித்தார்.
இதே நேரம் காணாமல்போனோர் தொடர்பாக முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு நேற்று மட்டக்களப்பு நகரில் கூடு சாட்சியங்களை பதிவு செய்தது.
மண்முனை வடக்கு பிரதேச செயலக கேபா மண்டபத்தில் ஆணைக்குழுவின் தலைவர் பராக்கிரம பரணகம தலைமையில் ஆணையாளர்களான மனோ ராமநாதன், சுரஞ்சனா வைத்தியரத்ன ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர். ஏற்கனவே முறைப்பாடு செய்த 53 பேரின் முறைப்பாடுகள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி வெல்லாவெலி ஆகிய பிரதேசங்களை சேர்ந்தோர் புதிதாக இன்று முறைப்பாடு செய்தனர். இதற்கான விசாரணைகள் பிறிதொரு தினத்தில் இடம்பெறும்
0 comments :
Post a Comment