Wednesday, March 26, 2014

CID யினரால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் மகளுக்கு போலி நாணயங்களை வழங்கியவர் ரோலிக்!

20 இலட்சம் ரூபா பெறுமதியான போலியான 5000 ரூபா நாணயத்தாள்களை கொழும்பு கறுவாத்தோட்டத்திலுள்ள தனியார் வங்கியொன்றில் வைப்பு செய்தார் என்ற குற்றச்சாட்டில் CID யினரால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸாவின் மகளுக்கு போலி நாணயங்களை வழங்கியவர் ரோலிக் ஒகஸ்டன் கிசாந்த என தெரியவந்துள்ளது.

குறித்த நபர் ஆடை உற்பத்தி தொழிற்சாலை வர்த்தகர் ரோலிக் ஒகஸ்டன் கிசாந்த பெரேரா என தெரியவந்துள்ளது. துலாஞ்சலி பிரேமதாச தனியார் வங்கி ஒன்றில் 20 லட்சம் ரூபா போலி நாணயத்தாளை வைப்பிலிடச் சென்றவேளை கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இதன் பின்னதாக அவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின்படி குறித்த வியாபாரியிடமிருந்து 5000 ரூபா பெறுமதியான 471 போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டன.

குறித்த வர்த்தகருக்கும் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸாவின் மகள் துலாஞ்சனி - ரொஹான் குடும்பத்தினருக்கு பல காலமாக தொடர்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இச்சம்பவம் போலி நாணயத்தாள் வர்த்தகம் என இதுவரை எந்தவித தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com