ஜெனிவா பிரேரணையை கண்டித்து அவுஸ்திரேலிய பா. உ. டொனல்ட் ரென்டல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்!
இலங்கையின் சகவாழ்வை சீர்குலைக்க வேண்டாமென தெரிவித்து, ஐரோப்பாவில் வாழும் இலங்கையர்கள், ஐ.நா. ஸ்தாபனத்தை வற்புறுத்தியுள்ளதுடன் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சகவாழ்வை சீர்குலைக்கும் நோக்கில், ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் சமர்ப்பிக் கப்பட்டுள்ள பிரேரணையை வன்மையாக கண்டிப்பதாகவும், அங்கு வாழும் இலங்கையர்கள் தெரிவித்தனர்.
இதற்கிணங்க அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர்கள், கென்பரா நகரில் அவுஸ்திரேலிய பாராளுமன்றத்திற்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜெனீவா மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான பிரேரணையை கண்டித்து இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றது.
அவுஸ்திரேலியாவின் சிட்னி, கென்பரா, பேர்த் ஆகிய மாநிலங்களில் உள்ள இலங்கையர்கள், கென்பரா மாநிலத்தில் ஒன்றுகூடி இலங்கை சார்பாக குரல் எழுப்பினர். அவுஸ்திரேலியாவில் வாழும் சகல தூதுவர்களையும் அறிறுத்து வதற்கும், அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அவுஸ்திரேலிய-இலங்கை நட்புறவு சங்க தலைவரும், அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினருமான டொனல்ட் ரென்டல் உட்பட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும், இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டமை, குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment