Monday, March 24, 2014

கடற்கரைகளை கைப்பற்ற முஸ்லிம் தீவிரவாதிகள் சதி – பொது பலசேனா!

இலங்கையின் கடற்கரையோரப் பிரதேசத்தை முஸ்லிம் தீவிரவாதிகள் கைப்பற்றுவதற்கான சர்வதேச சதி ஒன்றுள்ளதாக பொதுபலசேனா அமைப்பு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.


இந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது யுத்தத்தால் இடம்பெயர்ந்திருப்போருக்கு இன மத அடிப்படையை கவனத்தில் கொள்ளாது வீடுகள் உட்பட்ட சகல வசதிகளையும் வழங்க வேண்டும் என்பதுடன் அவர்களுக்கு யுத்தத்திற்கு முன் எப்பகுதியில் வசித்தார்களோ அதே பகுதிகளில் வீடுகளை நிர்மாணித்து குடியேற்ற வேண்டும்.

அதனை விடுத்து இலங்கையின் பசுமை காடுகள் அழிந்து செல்லும் யுகத்தில், வில்பத்து காட்டுக்கருகில் சுத்தப்படுத்தி வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை எடுப்பது மிகப் பயங்கரமான சுற்றாடல் அழிவாகும். 

இந்த நாட்டில் வாழ்வதற்கு எவ்வளவோ இடமிருக்க தமது அரசியல் நோக்கத்துக்காக இவ்வாறு வில்பத்து சரணாலயத்தை அழிப்பதற்கு இடமளிப்பது குற்றச் செயலாகும். மேலும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இந்த நாட்டின் கைத்தொழில் அமைச்சர். அவர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று முஸ்லிம்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்கு அரச சார்பற்ற அமைப்புக்களோடு ஒப்பந்தம் செய்வது பொதுவாக அரச நிர்வாகம் தொடர்பான பிரச்சினையாக நாம் காண்கின்றோம்.

யுத்ததின் பின்னர் சகல தரப்பினருடனும் பேசி நம்பிக்கை ஏற்படும் வகையில் ஒருமைப்பாடு ஏற்படும் வகையில் சமூக ஒருமைப்பாட்டை மேம்படுத்தும் வகையில் மீள் குடியேற்றம் இடம்பெற வேண்டும். 

எனினும் இவ்வாறு புதிய முஸ்லிம் கிராமங்களை ஏற்படுத்துவது எதிர்கால நெருக்கடியின் ஆரம்பமா? அவர்கள் அகதிகளானால் அவர்கள் ஆரம்ப ஊர்கள் எவை? அவர்களுக்கு வழங்குவதற்காக வில்பத்து காட்டை அழிக்கலாமா? பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சுற்றாடல் அமைச்சர் இது தொடர்பாக ஏன் மௌனம் காக்கிறார்கள் என்றும் பொது பலசேனா கேள்விஒன்றை இந்த அறிக்கையின் மூலம் எழுப்பியுள்ளது.

மேலும் இலங்கையின் கடற்கரைப் பகுதிகளை முஸ்லிம் தீவிரவாதிகள் கைப்பற்றுவது தொடர்பாக பல கலந்துரையாடல்கள் நாட்டுக்குள்ளும் சர்வதேச மட்டத்திலும் இடம்பெற்றுள்ளதாக எமக்கு கிடைத்துள்ள எனவே இது தொடர்பாக அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com