பேஸ்புக் சமூக வலையமைப்பை இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளது என, போலி வர்த்தமானியறிவித்தல் ஒன்றை வடிவமைத்து, இணையத்தில் உலாவருவதற்கு ஆவன செய்த நபர் தொடர்பில், இலங்கைத் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு மற்றும் அரசாங்க அச்சகம் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றது.
இதுதொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்படவுள்ளதுடன், இந்தப் போலி வர்த்தமானியறிவித்தலை வடிவமைத்தவரை கைதுசெய்வதற்கும் ஆவன செய்யவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
இந்தப் போலி வர்த்தமானி அறிவித்தல் அரசாங்க அச்சகத்திலிருந்து சென்ற 21 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியின் ஒருபக்கத்தில் வடிவமைத்து பேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது.
இலங்கைத் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அனுஷ பெல்பிடவினால் பேஸ்புடை தடைசெய்யப்பட்டுள்ளது எனக் கூறியதாக அப்போலி வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களை ஏமாற்றுவதற்காக இவ்வாறான வஞ்சகத்தன்மை வாய்ந்த போலி ஆவணங்கள் உருவாக்கியவர்களை கைதுசெய்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் பொறுப்பு பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
(கேஎப்)
No comments:
Post a Comment