Saturday, March 29, 2014

புலிகளின் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் விசாரணை வேண்டும் என்ற ஐ.நா வின் வேண்டுதலுக்கு அமெரிக்கா பாராட்டு.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் என தமிழ் மக்களுகளுக்கு கதை சொல்லப்படுகின்ற ஐ.நா வின் தீர்மானத்தில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என தெரிவித்துள்ளமையை வரவேற்று அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் பணியகத்தில் இருந்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையில், அதிபர் ஒபாமாவின் நேரடிக் கண்காணிப்பில் செயற்படும் தேசிய பாதுகாப்புச் சபையின் பேச்சாளர் கைற்லின் ஹேடன் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில்,

“எல்லா இலங்கையர்களுக்கும் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த, அர்த்தமுள்ள நடவடிக்கையை எடுக்கும்படி, சிறிலங்கா அரசாங்கத்தைக் கோரும், சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனிதஉரிமைகளை ஊக்குவிப்பது தொடர்பான, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் தீர்மானத்தை அமெரிக்கா வரவேற்கிறது.

போரின் போது, இருதரப்பினராலும் இழைக்கப்பட்ட மோசமான மனிதஉரிமை மீறல்கள், துஸ்பிரயோகங்கள், குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கவும், தொடர்ந்து மோசமடைந்து செல்லும் சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்து கண்காணிக்கவும், கோரும், இந்தத் தீர்மானத்துடன் நாம் இணங்குகிறோம்.

இந்த தீர்மானம், சிறிலங்காவின் தற்போதைய மனிதஉரிமைகள் நிலை குறித்த மற்றும் உலகளாவிய உரிமை மறுப்பு பற்றிய கவலையையும், மற்றும் சிறிலங்கா மக்கள் அனைவரும் தமது விருப்பங்களை அடையக் கூடிய, ஒரு எதிர்காலத்தை உருவாக்க, முக்கியமான அடிப்படை உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதையும் எடுத்துக் கூறியுள்ளது.

சிறலங்காவில் உள்ள எல்லா மக்களுக்கும் அமைதி, உறுதிப்பாடு, சுபீட்சம் என்பன கிடைப்பதற்கு, சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற அனைத்துலக சமூகம் கடமைப்பட்டுள்ளது என்ற தெளிவான செய்தி இந்த வாக்கெடுப்பின் மூலம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது” என்றும் கூறப்பட்டுள்ளது.

(கேஎப்)

1 comments :

Arya ,  March 30, 2014 at 4:25 AM  

Then Arrest Uruththirakumaran & Co and send back to sri lanka

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com