ரவியின் உதவியாளர் தேநீர் கோப்பையால் தாக்கி முன்னாள் நீதிபதி படுகாயம்!
கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் தனிப்பட்ட உதவியாளர் ஒருவர், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான எச்.பீ.கே. ஏக்கரத்னவின் உடம்பில் தேநீர் கோப்பையைக் கொட்டி, அக்கோப்பையினாலேயே தாக்கியது தொடர்பில் தலங்கம பொலிஸார் குறித்த நபரைக் கைது செய்துள்ளனர்.
ஸ்ரீலால் மாகலந்த என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்குள்ளான ஏக்கரத்ன கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஏக்கரத்ன சந்தேக நபரின் வீட்டுக்கு முன்பாகச் செல்லும்போது, இருவருக்குமிடையே நடந்த பேச்சு முற்றியமையினால், தேநீர் கோப்பையை வைத்திருந்த சந்தேக நபர் அதனை ஏக்கநாயக்கவின் உடம்பில் கொட்டிவிட்டு, அதனாலேயே கடுமையாகத் தாக்கியுள்ளார். கோப்பையினால் அடித்த அடி கன்னத்தில் பட்டு கன்னம் காயத்திற்குள்ளாகியுள்ளதாக ஏக்கநாயக்க முறைப்பாடு செய்துள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
(கேஎப்)
0 comments :
Post a Comment