ஜெனீவா பிரேரணை நாட்டை நிலைகுலையச் செய்யாதாம் - விக்கிரமபாகு
விமலின் கசைச் சத்தத்திற்கு மத்தியில் ஊர்வலம் சென்றாலும் அதற்கு எதிராக டளஸ் போன்றோர் எழுந்து நிற்பதாக நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரம பாகு கருணாரத்ன கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். ஜெனீவா பிரேரணை அரசாங்கத்தை பெரும் பிரச்சினைக்கு உள்ளாக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஜெனீவா பிரேரணை நாட்டை நிலைகுலையச் செய்யாது எனவும், காணாமற் போனோர் பற்றியோ, போர்க் குற்றம் பற்றியோ அப்பிரேரணையில் எந்தவொரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என விக்கிரமபாகு தெரிவித்தார்.
இந்தப் பிரேரணை மூலம் அரசாங்கத்தை நிலைகுலையச் செய்வது அல்ல நோக்கம். இன்று இந்தப் பிரேரணையில் உள்ளவை போதியதன்று என தமிழ் மக்கள் சொல்கிறார்கள். அமெரிக்கா தங்களை ஏமாற்றியதாகவும் அவர்கள் சொல்கிறார்கள்.
தலைவர் இன்று உதய கம்மன்பிலவின் கழுத்தில் அமர்ந்துகொண்டு, விமலின் கசைச் சத்தத்திற்கு மத்தியில் ஊர்வலம் செல்கிறார். இந்த ஊர்வலத்தால் நாட்டுக்கு ஆகப் போவது ஒன்றும் இல்லை. இதற்கெதிராக டலஸ் போன்றோர் எழுந்துநிற்கிறார்கள்”
(கேஎப்)
1 comments :
இவனுக்கு குடியுரிமையை பறித்து நாட்டை விட்டு துரத்த வேண்டும்.
Post a Comment