Friday, March 14, 2014

கிளி.தர்மபுரத்தில் ரி.ஐ.டி மீது துப்பாக்கி சூடு நடத்திய முன்னாள் புலி உறுப்பினர்

பயங்காரவாத நடவடிக்கையுடன் தொடர்பு பட்டவர் என பயங்காரவாத புலனாய்வுப் பிரிவினால் (ரி.ஐ.டி) தேடப்பட்டு வந்த கஜீபன் என அழைக்கப்பட்டு வந்த கோபி அப் பகுதியில் உள்ள முன்னாள் புலி உறுப்பினர் ஒருவரின் வீட்டில் நிற்பதாக ரிஐடியினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து அவ் வீட்டுக்கு சென்ற ரிஐடி அதிகாரி ஒருவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டுவிட்டு குறித்த குற்றவாளி கோபி தப்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து அப் பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன் அவர் தங்கி நின்ற முன்னாள் புலி உறுப்பினரின் வீட்டுக் காரர்களிடமும் விசாரணை இடம்பெறுவதாக அறிய முடிகிறது.

தர்மபுரம் பகுதியில் துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தால் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த குற்றவாளியான கோபியே தமிழினத்தின் காவலர்கள் என்னும் பெயரில் புலம்பெயர் நாட்டில் உள்ள சந்தோஸ் என்பவனின் உதவியுடன் துண்டு பிரசுரத்தை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தி பயங்கரவாத செயற்பாட்டை திட்டமிட்டவர் என அறியமுடிகிறது.

2 comments :

Arya ,  March 14, 2014 at 4:04 AM  

ஸ்ரீ தரன் M.P இதன் பின்னணியில் உள்ளான் , அவன் விசாரிக்க பட வேண்டும், அத்துடன் அபிவிருத்தி , ப்ராஜெக்ட் என்ற பெயரில் ஊடுருவி உள்ள முன்னாள் வெளி நாட்டு புலிகள் ( Lyca, Lebera உட்பட) பலர் இதில் சம்பந்த பட்டுள்ளார். இலங்கை புலனாய்வு பிரிவுக்கு மிக வெட்க கேடு, ஏதாவது பெண் புலியின் சேலை இருந்தால் வேண்டு கட்டலாம், அல்லது சரியான ஆம்பிளையாக 1987 - 1989 ல் புலிகளுக்கு எதிரான அமைப்புகள் செய்த மாதிரி செய்ய வேண்டும், ஒரு கோகோ கோலா கூட விசாரணைக்கு உதவும்," புலிகளுடன் அவர்களுக்கு புரியும் பாசையில் பேச வேண்டும் "

Anonymous ,  March 14, 2014 at 6:05 AM  

Yes, correct writen by Arya.

There are so many LTTE terrorist diaspoaras on field in Kilinochchi AND MULAITHIVU district with very very good deal with M.P SRITHARAN,SELVAM ADAIKKALANATHAN,ARIYANENTHIRAN, MAVAI SENATHIRAJAH, SIVASAKTHI AANANTHAN AND ANANTHY SASITHARAN.

Many tamils know well in europe regarding Lica and Lebera and there background with LTTE.

TID should filter first Sritharan M P.

See what from Lankasri:
(2ம் இணைப்பு)
[Photo] Photo [Video] Video
கிளிநொச்சியில் தாயையும் மகளையும் சுற்றி வளைத்துள்ள பொலிஸ்: அச்சத்தில் கிராம மக்கள்
[ வியாழக்கிழமை, 13 மார்ச் 2014, 12:55.57 PM GMT ]

ளிநொச்சியில் தாயொருவரையும் மகளையும் பொலிஸார் சுற்றி வளைத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்குத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சி தருமபுரம் முசிலம்பிட்டி வீட்டுத்திட்டத்தில் தன் பெண்பிள்ளையுடன் கணவனையும் ஆண் பிள்ளைகளையும் இழந்த நிலையில் வசித்துவரும் ஜெயக்குமாரியின் வீட்டில் புகுந்த பொலிசார் வீட்டை சுற்றிவளைத்துள்ள நிலையில், ஜெயக்குமாரிக்கும் கடந்த பதினைந்து நளுக்கு முன்னதாக பருவமடைந்த அவரது பெண் பிள்ளைக்கும் என்ன நேர்கிறது என்று தெரியாத நிலையில் அந்த கிராமத்து மக்கள் இந்தகணம் வரை அவலப்படுகின்றனர்.

குறித்த பெண் பிள்ளை பருவடைந்து ஆசார சடங்குகள் நடைபெறாத நிலையில் பொலிசார் அந்த வீட்டுக்குள் புகுந்து இருப்பது பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், இது உள்ளுர் சர்வேச அமைப்புக்களுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜெயக்குமாரியின் ஒரு ஆண் பிள்ளை போராட்டத்தில் வீரச்சாவடைந்ததுடன், இரண்டு ஆண் பிள்ளைகளை இதுவரையும் காணாமல் கண்ணீர் சுமந்தவராக இதுவரையும் தேடிவருகின்றார்.

தன் பிள்ளைகளை தேடித் தருமாறு எல்லா போராட்டங்களிலும் ஜெயக்குமாரி கலந்துகொண்டு வருவதுடன், தன் பிள்ளைகள் தொடர்பாக சர்வதேசத்திடம் நியாயம் கேட்டு வருகின்றார்.

இரண்டாம் இணைப்பு-

கிளிநொச்சி பகுதியில் ஒரு சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.

கிளிநொச்சியில், தர்மபுரம் பகுதியில் ஒரு வீட்டை இராணுவத்தினர் சுற்றி வளைத்து, அந்த வீட்டில் இருந்த இரு பெண்களை அங்கு தடுத்து வைத்திருப்பதாக அங்குள்ளவர்கள் தெரிவித்திருந்தனர்.

அந்தப் பெண்களை தாம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நிலைமையை அறிய முற்பட்டபோது, அவர்களுடன் அங்கிருந்த யாரோ, தன்னை அவர்களுடன் பேச அனுமதிக்கவில்லை என்றும், அவர்கள் தம்மை பொலிஸார் என்று கூறியதாகவும், அங்கு ஒரு விசாரணை நடப்பதாக அவர்கள் கூறியதாகவும், சட்டத்தரணி கஜேந்திர குமார் பொன்னம்பலம் கூறியிருந்தார்.

இந்த விடயம் குறித்து பொலிஸ்தரப்பு பேச்சாளர் அஜித் ரோகண, இது ஒரு குற்றவியல் சம்பவம் என்று அவர் கூறினார்.

அந்த வீட்டுக்கு ஒரு கிரிமினல் குற்றவாளியை தேடி பொலிஸார் சென்றபோது அவர் தப்பி ஓடிவிட்டார் என்றும் அப்போது ஒரு பொலிஸ்காரருக்கு காலில் காயம் ஏற்பட்டு விட்டது என்றும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

காயமடைந்த பொலிஸ்காரர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவருக்கு எப்படி காயம் ஏற்பட்டது என்பதை தன்னால் உடனடியாக கூற முடியாது என்றும் அதனையடுத்து அங்கு பொலிஸார் விசாரணை நடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

This is a propaganda:

குறித்த பெண் பிள்ளை பருவடைந்து ஆசார சடங்குகள் நடைபெறாத நிலையில் பொலிசார் அந்த வீட்டுக்குள் புகுந்து இருப்பது பலருக்கும் அச்சத்தை

See the differant of news by ILANKAI NET and LANKASRI.


Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com