ஆவா குழுவுடன் தொடர்புடைய ஆறு பேர் சுண்ணாகம் பொலிஸாரால் கைது!
யாழ்ப்பாணத்தை கலக்கிய சமூக விரோதக் குழுவான ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், நேற்று அதிகாலை ஆறு பேர் சுன்னாகம் பொலிஸாரல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாமிலுள்ள இளைஞர்களுக்கிடையில் இந்த வாரம் கோஷ்டி மோதல் ஒன்று நடைபெற்றிருந்தது இதனை தொடர்ந்து குறித்த மோதலில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொணட போது, ஆவா குழுவினர் பயன்படுத்திய பொருட்கள் சில கண்டுபிடிக்கப்பட்டதுடன், ஆவா குழுவினருடன் தொடர்புடையவர்களும் இனங்காணப்பட்டிருந்தனர்.
இதற்கமைய விசாரணைகளைத் தீவரப்படுத்தியிருந்த பொலிஸார், இச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் குறித்த முகாமிலிருந்த ஆறு பேரை நேற்று அதிகாலை கைது செய்துள்ளனர்.
அண்மைக்காலமாக யாழில் அதிகரித்து வரும் சமூகவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக, மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையில் விசேட பொலிஸ் குழுவொன்று அமைக்கப்பட்டிருந்ததுடன் இந்தக்குழு சுன்னாகம் பொலிஸாருடன் இணைந்து இவர்களைக் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற பொலிஸார், ஆவா குழு தொடர்பிலும் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2 comments :
IVANKALI NAANKAL KANAKKU EDUPPATHE ILLAI NEENKAL EAN KANAKKU EDUKKEREENKAL ELLAM SINNA PILLAIKAL NEWS PAPER ILL ODDU THAAN PERITHAAKKIREENKAL ENKALUKKU KAVALAI NAADDIL NAANKAL ILLAI ENTRU THIRUMPA VANTHAAL MULUPERUKKUM THERIUM
IVANKALI NAANKAL KANAKKU EDUPPATHE ILLAI NEENKAL EAN KANAKKU EDUKKEREENKAL ELLAM SINNA PILLAIKAL NEWS PAPER ILL ODDU THAAN PERITHAAKKIREENKAL ENKALUKKU KAVALAI NAADDIL NAANKAL ILLAI ENTRU THIRUMPA VANTHAAL MULUPERUKKUM THERIUM
Post a Comment