ஐ.நா.மனித உரிமைப் பேரவை தீர்மானத்தை ஏற்க முடியாது – மஹிந்த சமரசிங்க!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்தை ஏற்க முடியாது என ஜனாதிபதியின் மனித உரிமை விவகார விசேட பிரதிநிதி மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கொள்கை அடிப்படையில் இவ்வாறான தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாதுமனித உரிமைப் பேரவையில் இலங்கை இன்று எதிர்நோக்கியிருக்கும் அழுத்தங்களை அணிசேரா நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் வேறும் நாடுகளும் எதிர்நோக்க நேரிடலாம்.
எனவே, மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதற்கு அணிசேரா நாடுகளின் ஒத்துழைப்பு அவசியமாகின்றது எனவே இலங்கை சர்வதேச சமூகத்துடன் சுமூகமான உறவினைப் தற்போது பேணி வருகின்றது ஆகவே இலங்கையை ஊக்கப்படுத்தும் வகையிலான தீர்மானங்களே நிறைவேற்றப்பட வேண்டுமென தொரிவித்தார்.
ஆகவே தற்போது அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment