தனக்கும் இன்னொருவருக்குமிடை கள்ளத் தொடர்பு இருந்ததாகக் கூறியதால் துரத்தி துரத்தி அடித்தார் நதீஷா!
தென் மாகாண சபைக்காக ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடுகின்ற பிரபல நடிகை நதீஷா ஹேமமாலீ, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மிக நெருக்கமான ஒருவரை துரத்தித் துரத்தி அடித்து விரட்டியுள்ளதாக தெரியவருகின்றது.
நதீஷா ஹேமமாலீயின் தேர்தல் நடவடிக்கைகளில் மிக முக்கிய நபரான குறித்த நபர், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவருமாவார்.
தனக்கும் நதீஷாவுக்குமிடையே கள்ளத் தொடர்பு இருப்பதாக தான் சார்ந்தவர்களிடம் குறித்த நபர் கூறியிருந்த்தை அறிந்த பின்னரே நதீஷா அவரைத் விரட்டி விரட்டி அடித்துள்ளார்.
நதீஷா குறித்த நபரை விரட்டி விரட்டி அடிக்கும்போது, அவரை மங்கள சமரவீர காப்பாற்றியுள்ளார். பின்னர் குறித்த நபர் கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிடுகின்ற பெண் அபேட்சகரின் பிரச்சார நடவடிக்கைகளில் உதவுவதற்காக நியமிக்கப்பட்டார் எனவும் தெரியவருகின்றது.
(கேஎப்)
0 comments :
Post a Comment