மைவெளிச்ச சாஸ்திரம் பார்ப்பதாக கூறி பெண்ணை நிர்வாணப்படுத்திய பூசாரி கைது!
மைவெளிச்சம் மூலம் சாஸ்திரம் பார்ப்பதற்காக தேவாலயத்திற்குச் சென்ற ஆனமடுவ பிரதேசத்தை சேர்ந்த 27 வயது பெண்ணை நிர்வாணப் படுத்த முயற்சித்த சம்பவம் ஒன்று தொடர்பாக 49 வயது பூசாரி ஒருவர் கைதாகியுள்ளார்.
குறித்த இச்சம்பத்தில் பாதிக்கப்படட பெண் தேவாலயத்திலிருந்து தப்பிச் சென்று பொலிஸில் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்தே ஆனமடுவ பொலிஸார் சந்தேக நபரைக் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது குறித்த பெண் வியாதி ஒன்றுக்காக தேவாலயத்திற்கு சென்ற போது பெண்ணினை பார்த்த பூசாரி குணமாக்க முடியாத வியாதி ஒன்று காணப்படுவதாக தெரிவித்ததுடன் மைவெளிச்சம் மூலம் நோய் அறிகுறிகளைக் கண்டறிவதாக கூறி பெண்ணின் ஆடைகளை பூசாரி களைய முற்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment